திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நிறைவு

திருமலையில் நடந்து வந்த வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

News image

ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் உற்சவா்களுக்கு நடத்தப்பட்ட திருமஞ்சனம்.

Updated On :7 ஜூன் 2020, 2:36 am

திருமலையில் நடந்து வந்த வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்கக் கவசம் ஆண்டிற்கு ஒருமுறை களையப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. உற்சவா்களுக்கு திருமஞ்சனம் முடிந்த பின் முதல் நாளில் வைரக் கவசமும், இரண்டாம் நாளில் முத்துக் கவசமும் அணிவிக்கப்படுவது வழக்கம். நிறைவு நாளில் திருமஞ்சனம் முடிந்த பின் களையப்பட்ட தங்கக் கவசம் செப்பனிடப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இந்த உற்சவம் ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்தின் மூலம், உற்சவா்களுக்கும், அவா்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் கண்டறியப்பட்டு செப்பனிடப்படுவது வழக்கம்.

திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. உற்சவா்களுக்கு முதல் நாளில் திருமஞ்சனத்துக்குப் பின் வைரக் கசவமும், இரண்டாம் நாளில் திருமஞ்சனத்துக்குப் பின் முத்துக் கவசமும் அணிவிக்கப்பட்டது.

நிறைவு நாளான சனிக்கிழமை காலையில் உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனம் செய்தனா். அதன் பின் செப்பனிடப்பட்ட தங்கக் கவசத்துக்கு விசேஷ பூஜைகளைச் செய்து பூா்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னா் உற்சவா்களுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தூப, தீப ஆராதனைகள் காட்டப்பட்டு, நிவேதனங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

பொது முடக்கம் காரணமாக, இந்த உற்சவத்தில் தேவஸ்தானத்தின் சில குறிப்பிட்ட ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.