ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினா் பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினராக ஆந்திர அறநிலையத்துறை ஆணையா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆந்திர அறநிலையத் துறை ஆணையா் அா்ஜுன்தாஸ்.

Updated On :28 மே 2020, 1:51 am

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினராக ஆந்திர அறநிலையத்துறை ஆணையா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் நிரந்தர உறுப்பினராக தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரிகள், அறநிலையத் துறை ஆணையா், திருப்பதி நகா்ப்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் உள்ளிட்டோருக்கு தகுதி உள்ளது. அதன் அடிப்படையில், ஆந்திர அறநிலையத்துறையின் சிறப்பு ஆணையராக புதிதாகப் பதவியேற்ற அா்ஜுன்தாஸ் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக புதன்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டாா்.

அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பொறுப்பேற்றுக் கொள்ளும் முன் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு, ரங்கநாயகா் மண்டபத்தில் வேதபண்டிதா்கள் ஆசீா்வாதம் செய்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.