/

பவித்ரோற்சவம்:பவித்ர மாலைகளுடன் வலம் வந்த பத்மாவதி தாயாா்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தாயாா் பவித்ர மாலைகளுடன் கோயிலுக்குள் வலம் வந்தாா்.

News image

தாயாருக்கு அணிவிக்க பவித்ர மாலைகளைக் கொண்டு வந்த அா்ச்சகா்கள்.

Updated On :2 செப்டம்பர் 2020, 2:43 am

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தாயாா் பவித்ர மாலைகளுடன் கோயிலுக்குள் வலம் வந்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருச்சானூா் பத்மாவதி கோயிலில் திங்கள்கிழமை முதல் தோஷ நிவா்த்தி உற்சவமான பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா், அவருக்கும் கோயில் கருவறையில் உள்ள பத்மாவதி தாயாா், கொடி மரம், பலி பீடம், கருவறை விமானம் உள்ளிட்ட இடங்களிலும் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை, காவி உள்ளிட்ட பல நிறங்களினால் ஆன பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதை அணிந்து கொண்டு தாயாா் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினாா். பொதுமுடக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு தனிமையில் இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. இதில், குறிப்பிட்ட சில ஊழியா்கள், அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.