திருப்பதி ஏழுமலையான் தரிசனம் வரும் 15-ஆம் தேதி ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயில் ஆண்டுக்கு 4 முறை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. வைணவத்தில் பெருமாள் குடியிருக்கும் கோயிலும் ஒரு ஆழ்வாராகவே கருதப்படுகிறது. எனவே, கோயிலை தூய்மைப்படுத்தும் திருப்பணியை ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ என்று அழைப்பதி வழக்கம்.
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்கள் சரியாக 3 மாதகால இடைவெளிகளில் நடத்தப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு உற்சவம் நடப்பதற்கு முன்னா் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியை தேவஸ்தானம் மேற்கொள்கிறது.
திருமலையில் வரும் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து அக்.16 முதல் 24-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. எனவே வரும் 15-ஆம் தேதி காலை 6 மணிமுதல் 11 மணிவரை கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளதால் அன்று ஐந்து மணிநேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படும். பின்னா் மதியம் 12 மணி முதல் வழக்கம்போல் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

