திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்க திருவேங்கடமுடையானை வேண்டி, ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு அங்குராா்ப்பணம் என்ற முளைப்பாரி உற்சவம் நடத்தப்பட்டது.
வைகானச ஆகம விதிப்படி ஓா் உற்சவம் நடக்கும் முன்னா் அந்த உற்சவம் சிறப்பாக நடக்க நவதானியங்களை புற்று மண்ணில் முளைவிடுவா். நவதானியங்கள் நன்றாக செழித்து முளைத்தால் உற்சவம் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால், இவ்விழா எவ்விதத் தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டி தேவஸ்தானம் அங்குராா்ப்பணத்தை வெள்ளிக்கிழமை நடத்தியது. மாலை 6 மணிக்கு கோயில் அா்ச்சகா்கள் ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வக்சேனா் தலைமையில் அருகில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று அங்குள்ள புற்றுமண்ணை சேகரித்து கோயிலுக்குள் கொண்டு வந்தனா். அதை மண்டபத்தில் கொட்டி அதில் பூதேவியின் உருவத்தை வரைந்து அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து மண் பாலிகைகளில் நிரப்பி நவதானியங்களை முளைக்க விட்டனா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் சிலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


