பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால் போக்கிலன்
வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம்
உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே.
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
ஏதங்கள் = குற்றங்கள். சீதங்கொள் = குளிர்ந்த தண்ணீரை உடைய. போக்கு வரவு = பிறப்பு மற்றும் இறப்பு. புலவோர் = புலவர்கள், அறிஞர்கள்.
பொருள்
ஐந்து பூதங்களிலும் நிலையாக நிற்கின்றாய் என்றும், பிறப்பு மற்றும் இறப்பினைக் கடந்தவன் என்றும் உனது பெருமைகளை அறிஞர்கள் பாடல்களாக பாடுவதையும் ஆடுவதையும் அறிவோம். ஆனால் உன்னை முழுவதும் நேரில் கண்டு அறிந்தவர்களை இதுவரை நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த தண்ணீர் தங்கும் வயல்களை உடைய திருப்பெருந்துறை தலத்தின் அரசே, எங்களது சிந்தைனுக்கு மிகவும் அரியவனே, எங்களின் குற்றங்களைக் களைந்து எங்கள் முன் வந்து நின்று காட்சி கொடுத்து அருள்புரிவதற்காக இறைவனே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

