ஒருவர் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று தொழில் தேர்வு. அது அவரின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது. ஒருவரின் ஆர்வம் அல்லது கல்வி, அவர் தேர்ந்தெடுக்கும் தொழிலுடன் எப்போதும் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஏனெனில் பல நேரங்களில், ஒரு தொழில் என்பது கல்வி / தொழிலை மட்டும் சார்ந்து இல்லாமல், வாழ்க்கைத் திறன்களைச் சார்ந்தே அமைகிறது.
சில நேரங்களில், என்ன தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பல குழப்பமான எண்ணங்கள் எழுகின்றன. அவரவர் ஜாதகத்தின் அடிப்படையில், அனைவருக்கும் பிரத்யேகமான தொழில் அமையும்.
ஒருவர் சந்திர ராசிகள் என்றால் அவரின் திறமை மற்றும் வாழ்க்கைத் திறன்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும் என்பதால், அவர் விரும்பும் ஒரு தொழிலுக்கான சரியான வழிகாட்டுதலுக்கு இந்தக் கட்டுரையைப் பாருங்கள்.
ஜோதிடம் சுட்டிக் காட்டும் காரணிகள்
ஜோதிடத்தில் கிரகங்களைப் பற்றியும், சர்வாஷ்டக முறைப்படியான ராசிகள் பெறும் பரல்கள் பற்றியும் அறிந்து பலன்களைத் தெளிவாகவும் சரியாகவும் கூற முடியும். கிரகங்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி ஆராய்வது ஒரு வழி. மற்றொன்று ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் பெறும் பரல்களைக் கொண்டும் தீர்மானிக்க முடியும்.
உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் 30 மற்றும் அதற்கு மேலாக பரல்களை பெற்றிருப்பின் அந்த ஜாதகர் படித்த படிப்புக்கேற்ற வேலையும், ஒரு வேலையை விட்டு வேறு வேலை தேடினாலும் நிச்சயம் கிடைக்கும் எனவும் அறியலாம். மிகக் குறைந்த பரல்களை அதாவது 25-க்கும் குறைவாக ஒருவர் 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் பெற்றிருப்பின் அவருக்குப் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது. மேலும், அவர் அடிமை தொழிலை தான் கடைசி வரை செய்ய வேண்டி வரலாம்.
ஒருவர் ஜாதகத்தில் 35-க்கு மேல் 10-ஆம் இடத்தில் பரல்களை பெற்றிருப்பாராயின், அவர் தனியாகத் தொழில் செய்யும் நிலையை அடைவார். இருப்பினும் மற்ற கிரக அமைப்புகளை அதன் வலிமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க சிறப்பாக அமையும். இந்த கட்டுரையில் மேஷம் மற்றும் ரிஷப ராசிகளுக்கான சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பற்றியும், மோசமான தொழில் அமைப்புகளைப் பற்றியும் அறியலாம்.
ஜோதிடம் மேற்படி ஒருவரின் ஜாதகப்படி குறி காட்டுமே அன்றி அதுவே முடிவானதாகக் கருதாமல், முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவது நிதர்சனம். எல்லாம் கிடைத்துவிடும் என சிலரின் ஜாதக அமைப்புக்கு நேர்மாறாக செயலாற்றுவதைத் தடுப்பதுவே இந்த ஜோதிட கட்டுரையின் நோக்கமாகும்.
மேஷம்
ஆற்றல் மிக்கவர், லட்சியவாதி, புத்திசாலி. ஊக்கமுள்ளவராக இருப்பதால், சவால்களை ஏற்றுக்கொள்வதையும், செயல் சார்ந்த பணிகளைக் கையாள்வதையும் விரும்புவார்கள். இவர்கள் எண்ணங்கள் புதுமைகள் நிறைந்ததாக இருக்கும். அதிக மன அழுத்தம் உள்ள சூழலிலும் கூட முடிவுகளைச் சரியாக எடுக்கக்கூடியவர். துடிப்பான ஆற்றலும், ஆற்றல் மிக்க அணுகுமுறையும் கொண்டவர். இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே தலைமைத்துவம் கொண்டவர். சாகச விளையாட்டுகளில் இவருக்கு அமையும் தொழில் வாழ்க்கை இவரின் துணிச்சல் மிக்க குணத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.
மேஷ ராசிக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
தொழில்முனைவோர், பங்குத்தார்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர், பொழுதுபோக்குத் துறை நிபுணர், ஊடக விளம்பர மேலாளர், தீயணைப்பு வீரர், பேரிடர் மேலாண்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு சேவைகள், ராணுவ அதிகாரி, அரசியல்வாதி, விளையாட்டு வீரர்கள்.
மேஷ ராசிக்கான ஒத்துவராத தொழில் வாய்ப்புகள்
மேஷ ராசிக்காரர்களால் ஒரே இடத்தில் மந்தமான பணிகளைச் செய்ய முடியாது. இவர்களுக்கு பேக்கன்ட் புரோசஸ் தொழில் முற்றிலும் ஒத்துவராது.
ரிஷபம்
நடைமுறைக்கு ஏற்றவர், திட்டமிட்டுச் செயல்படுபவர், மிகவும் நம்பகமானவர். இந்த ராசிக்காரர்கள் வேலையை மிகவும் பொறுப்புடன் எடுத்துச்செய்பவர். அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர். முன்கூட்டியே திட்டமிடத் தெரிந்தவர். இவர்கள் நிலையான வேலையை விரும்புவார்கள். விடாமுயற்சியுள்ள பணியாளராக இருப்பார்கள். வேலைப் பாதுகாப்பு மற்றும் நிரந்தர தன்மைக்காகப் பாடுபடுவார்கள்.
இலக்கு சார்ந்த இவர்களுக்கு எப்படி ஒரு விஷயத்தைக் கையாள்வது என்று தெரிந்தவர். கட்டளைகளைப் பின்பற்றுவதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் சிறந்தவர். பண நிர்வாகத்தில் மிகவும் சிறந்தவர், எனவே நிதி தொடர்பான வேலைகள் இவரின் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவை. இவர்கள் விரும்பும் இடத்தை அடையக் கூடுதல் முயற்சி எடுப்பார்கள்.
ரிஷப ராசிக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
வங்கித்துறை, கணக்கியல், அறிவியல் ஆராய்ச்சி, கல்வியாளர், செவிலியர், பொறியியல், மருத்துவம் அல்லது மருந்துத் துறை, திட்ட மேலாளர், தலைமை கட்டடக் கலைஞர், இயற்கை புகைப்படக் கலைஞர், உள்துறை வடிவமைப்பாளர், கலை இயக்குநர், பாடகர் / இசைக் கலைஞர், ரியல் எஸ்டேட் தரகர்.
ரிஷப ராசிக்கான ஒத்துவராத தொழில் வாய்ப்புகள்
இவர்கள் நிலைத் தன்மையுடன் கூடிய மெதுவான வேலைச் சூழலை விரும்புவதால், வழக்கத்திற்கு மாறான தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்கள். புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களின் அதிவேக சூழலுக்கு ஈடுகொடுக்க இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலே கூறப்பட்டவை ஒரு சிலவே. ஒருவரின் ஜாதகத்தை ஆராய்வதுடன், தசாம்சம் போன்ற வர்க்க சக்கரங்களை ஆராய்ந்து பலன் எடுப்பதுவே சிறந்ததாகும்.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல..."பரிகாரம்", என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."
தொடர்புக்கு : 98407 17857, 91502 75369
Summary
Is it possible to determine through astrology which professions a person should or should not pursue?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!

சிறுகதையல்ல நாடகக் கவிதை!

விக்ரம் - வேதா - விஜய்!

நாமக்கல்லில் நெசவியல் கல்லூரி கோரும் விசைத்தறியாளா்கள்!
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

