தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2016, 9:36 am

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ம.முத்து பட்டர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார்.

தொடாந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்;கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சிபுரம் தவத்திரு. சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் வெ.கோபால், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்களும், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் உள்ளிட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.