மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 48வது ஆண்டு அருள் விழா வருகிற 29ந்தேதி துவங்குகிறது.
தொடர்ந்து 2ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மாதா அருள்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசியில் அருள்விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுóக்காக 48வது ஆண்டு அருள்விழா வருகிற 29ந்தேதி (வியாழன் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அருள்தல வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 29ந்தேதி (வியாழன் கிõழமை) முதல் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி,திருக்கொடி ஏற்றத்திருவிழா,விசுவாச கோபுரம்,செபத்தோட்டம் திறப்பு விழா,2017ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு,அச்சிறுப்பாக்கத்து அம்மா,இரக்கத்தின் அன்னை ஆகிய இசை குறுந்தகடுகள் வெளியீடு,5திருத்தேர்களின் ஆடம்பர பவணி,மழை மலைமாதா திருத்தேர் பவனி,ஏழை எளியோர்களுக்கு இலவச திருமணங்கள்,நலத்திட்ட உதவிகள் வழங்கல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வருகிற அக்டோபர் 2ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஆயர்கள்,பக்தர்கள் கலந்துக் கொள்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்னிசை,கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் அருள்தல அதிபர் எல்.தாஸ் தலைமையில் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


