தொம்பரை ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய வழுதலம்பேடு பகுதியில் அருள்மிகு தொம்பரை ஆண்டவர் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய வழுதலம்பேடு பகுதியில் அருள்மிகு தொம்பரை ஆண்டவர் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை மங்கள இசை, சோமகும்பபூஜை, ,பிரதான கலச பூஜை, இரண்டாம்கால யாக சாலை பூஜை, நூதன விக்கிரங்கள், கரிகோலம் வலம் வருதல், மூன்றாம் கால யாகசாலை பூஜை, அஷ்டோதர நாமாவளிகள், தேவாரம் பாராயணம், புதிய சிலைகளுக்கு பிம்ப சுத்தி, பஞ்சகவ்ய அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை மங்கள இசை, சோமகும்ப பூஜை, பிரதான கலச பூஜை, நாமகர்ணம், நாடிசந்தனம்,நான்காம் யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள், தீபாரதனை, வேத உபசாரம், யாத்ராதானம், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி டி.இ.கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் முன்னின்று நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com