பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சபரிமலையில் மண்டல பூஜை துவக்கம்

சபரிமலைக் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின. 

News image
சபரிமலைக் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை மண்டல கால நெய் அபிஷேகத்தை தொடக்கி வைத்த புதிய மேல்சாந்தி கே.வி.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி.
Updated On :16 நவம்பர் 2017, 7:18 pm

DIN

சபரிமலைக் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின. 
சபரிமலையில் மண்டல பூஜை தொடங்குவதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக சபரிமலையில் தங்கி பூஜைகள் நடத்தி வந்த மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் பதவி நிறைவு பெறுவதையொட்டி, அவர் வியாழக்கிழமை கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர், கணபதி கோயிலில் விளக்கேற்றிவிட்டு 18 -ஆம் படி வழியாக இறங்கிச் சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார்.
அதைத்தொடர்ந்து, புதிய மேல்சாந்திகளான சபரிமலை கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, மளிகைப்புரம் அனிஷ் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து, 18 -ஆம் படி வழியாக அழைத்துச் சென்றார். ஸ்ரீகோயில் முன்பாக அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு, சபரிமலை புதிய மேல்சாந்தியான கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஸ்ரீகோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தி, ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார். பின்னர், அவரது காதில் ஐயப்பன் மூல மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதேபோன்று, அனிஷ் நம்பூதிரிக்கும் மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில், தந்திரி அபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் உச்சரித்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
அதன் பின்னர், மண்டல கால நெய் அபிஷேகத்தை தந்திரி தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.