திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலையில் திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது.
விழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலையில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் முதலாவதாக விநாயகர், தொடர்ந்து திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி மற்றும் அம்பாள் என நான்கு தேர்கள் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.
விழாவில் 11ஆம் தேதி காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 12ஆம் தேதி சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
14ஆம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சு.செல்வகுமாரி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?

உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


