வேலூரில் உள்ள திருப்பதி திருமலை படிவிழா சங்கம் சார்பில் திருப்பதியில் வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் படி உற்சவம் நடத்தப்பட உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
திருப்பதியில் ஆண்டுதோறும் வேலூரில் உள்ள திருப்பதி திருமலை படிவிழா சங்கம் சார்பில் படி உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இச்சங்கம் சார்பில் 49ஆம் ஆண்டு படி உற்சவம் நடைபெற உள்ளது.
இதில் 200 பஜனைக் குழுவினர் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 16ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள சத்திரத்தில் பக்திப் பாடல்கள், பஜனைகள் நடைபெற உள்ளன.
அதன் பின் 17ஆம் தேதி காலை அலிபிரி மலையடிவாரத்தில் ஸ்ரீஜீயர் சுவாமிகள், சதுர்வேதி சுவாமிகள், தவத்திரு தேவ பிரகாசானந்த சுவாமிகள், மானவல்லி (எம்.ஆர்.கவி) ராமகிருஷ்ண சுவாமிகள் மற்றும் தேவஸ்தான ஆழ்வார்கள் பிரபந்த செயல்திட்ட அதிகாரி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலையில் படிபூஜைகள் நடைபெற உள்ளன.
அதன் பின், பெண்கள் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றியபடி படியேறி திருமலைக்கு வருவார்கள். அங்கு வெங்கடாசலபதி கோயிலின் நான்கு மாட வீதிகளை வலம் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளனர்.
இந்த விழாவில் சித்தேரிப்பட்டு, பெரிய செறுவத்தூர், திருப்பத்தூர், இரும்புலி, சின்னசாத்தம்பட்டி, கன்னபுலியூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பஜனைக் குழுவினர் நடந்து வந்து இந்தப் படி உற்சவத்தில் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

