சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருமலை தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில், புகழ்பெற்ற ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், அக்ஷய திருதியை அன்று சந்தனோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, புதன்கிழமை அக்ஷய திருதியையொட்டி, அக்கோயிலில் சந்தனோற்வ விழாவை கோயில் நிர்வாகம் நடத்தியது. இதில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின்போது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது. தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று, கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். கடந்த, 1996-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானம் இக்கோயிலுக்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏழுமலையான் கோயிலில்66,124 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை மட்டும் 66,124 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,353 பேர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
புதன்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, வைகுண்டத்தில் உள்ள ஒரு காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.
டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
உண்டியல் காணிக்கைரூ. 3.21 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 3.21 கோடி வசூலானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



