ஏழுமலையானை வழிபட இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன் மனைவியுடன் வியாழக்கிழமை திருமலைக்கு வந்தார்.
அவர் ஏழுமலையானை ஆண்டிற்கு ஒரு முறை வழிபட்டு வருகிறார். அதன்படி அவர் தன் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் இலங்கையிலிருந்து தனி விமானம் மூலம் வியாழக்கிழமை மதியம் சென்னை விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் திருப்பதி விமான நிலைதுக்கு வந்தார்.
அங்கு விக்ரமசங்கவை ஆந்திர அரசு சார்பில் சுரங்கத் துறை அமைச்சர் சுஜயா கிருஷ்ணரங்காராவ், சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி மற்றும் அதிகாரிகள் மலர்ச் செண்டு அளித்து வரவேற்று திருமலைக்கு சாலை வழியாக அழைத்துச் சென்றனர்.
திருமலையை அடைந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கும் வசதி செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கும் அவர்கள் வெள்ளிக்கிழமை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளனர். இலங்கைப் பிரதமரின் வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








