ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சீரங்கத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு பால்குட விழா மற்றும் ஆடிப்பூர விழா வரும் 13ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் உள்ள சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு பால்குட விழா மற்றும் ஆடிப்பூர விழா வரும் 13ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. 
சென்னை மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரம சுவாமி சங்கரானந்தா ஆசியுடன் நடைபெறவுள்ள இந்த விழாவை முன்னிட்டு 13ஆம் தேதி காலை சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி ஆலய மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார ம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். அடுத்து மானாம்பதி பஜார்வீதி காளியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு சீரங்கத்தம்மனுக்கும் செல்லியம்மனுக்கும் பக்தர்களின் கரங்களால் பால்குட அபிஷேகம் நடைபெறும். 
அன்று பிற்பகல் சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடத்தி, தீபாராதனை காட்டப்படும். அடுத்து மாலை பெண்களால் அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அம்மன் புறப்பாடும் நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மானாம்பதி கிராமத்தார் மற்றும் சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.