
ஆரம்பாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீமிதி திருவிழா
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள் சபா சார்பில் 15-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா வந்த சுப்பிரமணிய சுவாமி. (வலது) திருவிழாவை யொட்டி தீமிதித்த பக்தர்கள்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள் சபா சார்பில் 15-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆரம்பாக்கம் நல்லட்ராயன் கண்டிகை பகுதியில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள் சபா சார்பில் 15-ஆவது ஆண்டு தீமிதி விழாவையொட்டி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வும், தொடர்ந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நிகழ்வும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.
இதில், புதன்கிழமை தீமிதி விழாவை முன்னிட்டு முக்தி விநாயகர் கோயிலில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பட்டு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. பிறகு புனித நீரில் வேலுக்கும், தண்டாயுதத்திற்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு நா வேல் தரித்தல் நடைபெற்றது.
தொடர்ந்து, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, காப்பு கட்டிய 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






