‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா

திருவள்ளூர் அருகே பஞ்சபாண்டவர் சமேத திரெளபதி அம்மன் திருக்கோயிலில் மகாபாரத திருவிழாவை முன்னிட்டு திரெளபதி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 

ஆடி  உற்சவத்தையொட்டி  சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த திரௌபதி  அம்மன்.  

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


திருவள்ளூர் அருகே பஞ்சபாண்டவர் சமேத திரெளபதி அம்மன் திருக்கோயிலில் மகாபாரத திருவிழாவை முன்னிட்டு திரெளபதி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
திருவள்ளூர் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபாண்டவர் சமேத திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 18 நாள்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கமாகும். 
இத்திருவிழா கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்13-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் பஞ்சபாண்டவர் சமேத திரெளபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தவவேடனும், சிவவேடனும் நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
அதைத் தொடர்ந்து சிம்ம லக்னத்தில் அம்மனுக்கு துவஜாரோஹணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பெரும்பாக்கம், ஈக்காடு, சின்ன ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.