திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்ட வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்ட வீதி உலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.

புதன்கிழமை மாலையில் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1-ம் படி, செப்பு ஸ்தலத்தார் ஆ.கோபி ஐயர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது.

நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் பா.பாரதி. உள்துறை கண்காணிப்பாளர்கள் வெள்ளச்சாமி, செர்ணம், உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறைத் தலைவர் நாட்டாம்பலம் தி.சிவராமலிங்கம், செயலர் ம.அய்யனார், பொருளாளர் பி.மாரியப்பன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com