வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சனியின் பிடியில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை வழிபாடு..!

ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.

News image
Updated On :24 பிப்ரவரி 2018, 7:17 am


ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். 

அப்படிப்பட்ட சனிபகவானால் நமக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்தப் பரிகாரத்தையும், விரதத்தையும் செய்வதன் மூலம் சனிதோஷத்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

• சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கலாம். 

• சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களைச் சொல்லியும் வழிபடலாம். 

• எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வேங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.

• சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.

• சனிக்கிழமைகளில் சனிபகவான் கோயிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.

• சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

• வசதியுள்ளவர்கள் சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.

• அவரவர்களது பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளைத் தரும்.

• தினசரி நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். 

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய எளிய வழிபாடு

• சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. 

• ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.

• சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு உண்ணலாம். அன்றைத் தினம் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.