வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

News image
Updated On :27 பிப்ரவரி 2018, 6:55 am


மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 

மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதைத் தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு.

இத்தலத்தில் மாசிப்பெருவிழாவானது பிப்ரவரி 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாணம் இன்று காலை வேத மந்திரம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. 

ஏராளமான பக்தர்கள் இத்திருமண விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.