வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருப்பதி : உண்டியல் காணிக்கை ரூ. 2.80 கோடி

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On :8 ஜூன் 2018, 1:40 am IST

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 2.80 கோடி வசூலானது. 
75,498 பக்தர்கள் தரிசனம் 
ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,498 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 41,029 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை காலை நேர ஒதுக்கீடு முறை மற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 20 மணி நேரத்துக்குப் பின் தரிசனம் அளிக்கப்படுகிறது.
தர்ம தரிசன பக்தர்கள் 26 காத்திருப்பு அறைகளில் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர். 
விரைவு தரிசனம், தர்ம தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் 2 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.