திருமலையில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளையொட்டி, மலையப்ப சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாக தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சம்பங்கி பிரகாரத்தில் வேத மந்திர உச்சாடனங்களுக்கு இடையில் பால், தயிர், தேன், இளநீர், பழரசங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், சிவப்பு சந்தனம் உள்ளிட்ட பொருள்களை திருமலை ஜீயர்கள் எடுத்துத் தர, ஸ்நபன திருமஞ்சனத்தை அர்ச்சகர்கள் நடத்தினர்.
அதன்பின், அர்ச்சகர்கள் சாந்தி ஹோமம் செய்து மகா பூர்ணாஹுதி நடத்தி, செப்பனிடப்பட்டு, புதிய மெருகுடன் உள்ள தங்கக் கவசத்துக்கு பூஜைகளை செய்தனர். பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. புதிய தங்கக் கவசம் அணிந்து கொண்டு ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூர்த்திகள் தங்கக் கவசத்துடன் மாடவீதியில் வலம் வந்தனர்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர். இந்த தங்கக் கவசம் இனி அடுத்த ஆண்டு ஆனி மாதம் மட்டுமே உற்சவ மூர்த்திகளிடமிருந்து மீண்டும் களையப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

மேற்கு கரையில் மசூதிகளுக்குத் தீவைப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


