ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் ஓவியங்கள் மீது சிமென்ட் பூச்சு: பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பழமை வாய்ந்த ஓவியத்தின் மீது சுவிட்ச் போர்டு

News image
Updated On :27 ஜூன் 2018, 4:17 pm IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பழமை வாய்ந்த ஓவியத்தின் மீது சுவிட்ச் போர்டு வைத்து சிமென்ட் பூச்சால் அழிக்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளும், சுவர் ஓவியங்களும் அமைந்துள்ளன. கோயிலில் உள்ள வையத்திருமாளிகை சுவரின் மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தசாவதாரங்கள், பள்ளி கொண்ட பெருமான், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை உட்பட திருமாலின் பெருமைகளை விளக்கும் ஓவியங்கள் ஆகும். 

இந்நிலையில், ஓவியத்தின் பழமையும், பெருமையும் தெரியாமல் அங்குள்ளோர் சுவிட்ச்போர்டு வைத்து சிமென்ட் பூச்சு பூசி இருப்பது பக்தர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.