கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பௌர்ணமி பூஜை, சத்தியநாராயண பூஜை ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
கருங்குழி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தமிழ் மாதந்தோறும் பௌர்ணமி பூஜை நடைபெறுவது வழக்கம். ஆனிமாத பௌர்ணமியை முன்னிட்டு பிருந்தாவனம் முழுவதும் வியாழக்கிழமை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
ராகவேந்திரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிருந்தாவன வளாகத்தில் சிறப்பு மேடையில் ராகவேந்திரர், சத்தியநாராயணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவ சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, பஜனை கோஷ்டி பாடல்களை பாடிவர, தவ யோகவத்தில் இருந்து வரும் பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு சத்தியநாராயண பூஜையை அவர் நடத்தினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரர் பிருந்தாவன அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










