தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை மழை காரணமாக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜூன் 2018, 6:36 am

தினமணி


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை மழை காரணமாக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முதல் யாத்திரைக்குழு ஜம்மு நகரில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த யாத்திரைக்கு இதுவரை இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இருக்கும் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் யாத்திரை சென்று பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்தும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 

நிகழாண்டுக்கான யாத்திரை வியாழக்கிழமையான இன்று தொடங்கியது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள யாத்ரீகர்கள் ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், பல்டால் மற்றும் பகல்காம் ஆகிய இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகின்றது. வானிலை சரியாகும் வரை பக்தர்கள் யாரும் மலை ஏற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் முகாமிட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த யாத்திரை, ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.