கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஏரிகாத்த ராமர் கோயில் பிரம்மோற்சவம்: இன்று பெரிய தேரோட்டம்

ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாள் விழாவாக பெரிய தேரோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :29 ஜூன் 2018, 2:38 am IST

ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாள் விழாவாக பெரிய தேரோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவக் கோயிலாக விளங்கும் ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி) கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து யாளி, சிம்ம வாகனம், சந்திரப் பிரபை, சூரியப் பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரப் பெருமான் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து காட்சி அளித்தார். வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர் புஷ்பக விமானத்தில் (வெள்ளித்தேர்) மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து காட்சி அளித்தார். 
தொடர்ந்து வெள்ளிக்கிழமை, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர் எழுந்தருளி தேரடி வீதி, செட்டித் தெரு, ஹாஸ்பிட்டல் சாலை, பஜார் வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருகிறார். காலை 9 மணிக்கு பெரிய தேரோட்ட வடத்தை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி, எம்.பி. மரகதம் குமரவேல் ஆகியோர் இழுத்து தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகரமன்ற முன்னாள் தலைவர் மலர்விழி குமார், நகர திமுக செயலர் கே.குமார், காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக செயலர் 
எஸ்.ஆறுமுகம், பேரவைச் செயலர் ஆனூர் பக்தவத்சலம், மதுராந்தகம் சார் ஆட்சியர் மாலதி, வட்டாட்சியர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏரிகாத்த ராமர் கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமையில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.