அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் மார்ச் 30-ம் தேதி நிகழ உள்ளது.
தொண்டை நாட்டின் 32 பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தில் 51வது ஊர் என்று அழைக்கப்படும் அம்பத்தூர் மாநகரத்தில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தில் (திருமுல்லைவயில், திருவல்லிதாயம்) ஆலயத்திற்கு நடுநாயகமாகவும், திருமுல்லைவாயில் ஆலயத்திற்கு ஈசான்ய லிங்கமாகவும் கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சிவாலயத்தில் நிகழும் ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 16-ம் நாள் (30.03.18) வெள்ளிக்கிழமை, சதுர்த்தசி பௌர்ணமி திதி, உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக ஆத்மநாத ஈஸ்வரர்-அன்னபூரணி அம்பாளுக்கும், சிவசுப்ரமண்யருக்கும்-வள்ளி தேவசேனா அம்பாள்களுக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும்-மனோன்மணி அம்பாளுக்கும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோவர்த்தன நேசப்பெருமாள் எழுந்தருளி அருள்மிகு ஸ்ரீசுந்தர விநாயகர் ஆலயத்தில் நடைபெறவிருப்பதால் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொண்டு கண்டுகளித்து எல்லாம் வல்ல அனைத்து சுவாமிகளின் அருள்பெற வேண்டுகிறோம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.501, ரூ.1001, ரூ.3001 என நன்கொடை அளித்து இறைவன் அருளுக்குப் பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயிரம் முறை சொல்லுவேன்! துரை வைகோ பேட்டி | MDMK | DMK

நீட்-2026 மறுதேர்வு வினாக்களும் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரிப்பதாக என்டிஏ பதில்

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? ஆனால், மீண்டும் தோல்விதான்: மார்க்சிய கம்யூ.

ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அரசு விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44



