வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? ஆனால், மீண்டும் தோல்விதான்: மார்க்சிய கம்யூ.

அண்ணாமலை புதுக் கட்சியைத் தொடங்கினாலும் தோல்விதான் அடைவார் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

News image

கே. அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:26 pm IST

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுக் கட்சியைத் தொடங்கினாலும் தோல்விதான் அடைவார் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்களுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, "பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராகச் செயல்பட்ட அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த பிணத்தை (பாஜக) உயிரூட்டுவதற்குப் பதிலாக, முயற்சித்தும் பயனேதும் இல்லாததால், மாறுவேடமிட்டு புதுக் கட்சியைத் தொடங்கினாலாவது ஏதேனும் நடக்குமா என்று அவர் முயற்சிக்கிறார்.

ஆனால், இந்துத்துவா மற்றும் சநாதனக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மத்தியிலுள்ள பாஜகவின் முகத்தை மாற்றி, வேறொரு பெயரில் வேறொரு கட்சியைத் தொடங்குவதால், தமிழ்நாட்டில் வேர்ப் பிடிப்பையோ செல்வாக்கையோ பெற முடியாது.

ஆகையால், மீண்டும் ஒருமுறை அண்ணாமலை தோல்வியடையவிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Summary

CPI(M) criticizes that K. Annamalai will face defeat even if he launches a new party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.