அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம், பனங்காடு ஆகிய கிராம மக்கள் சேர்ந்து பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவை ஆண்டுதோரும் சித்திரை மாத கடைசி புதன்கிழமையில் நடத்தி வருகின்றனர். இதன்படி, இந்த ஆண்டு ஏரித்திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு, தீபாராதனை ஆகியவையும், இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்பரதத்தில் ஏறுதல், வாணவேடிக்கை, சிறப்பு மேளம், கரகாட்டம், நையாண்டி ஆகியவையும், புஷ்பரதம் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, ஏரித்திருவிழாவின் சிறப்பு அம்சமான வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து புஷ்ப ரதம் புதன்கிழமை புறப்பட்டு அன்னாச்சிபாளையம் வழியாக வேலங்காடு ஏரியை மதியம் 1 மணிக்கு சென்றடைந்தது. அப்போது அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் வேலங்காடு, பனங்காடு கிராமங்களில் தேர் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக பொற்கொடியம்மன் மீண்டும் வல்லண்டராமம் கோயிலுக்கு திரும்பும் வைபவம் சனிக்கிழமை நடக்கிறது.
இந்நிகழ்ச்சியையொட்டி வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!

சினிமாவில் கிடைக்காத அங்கீகாரம் சின்ன திரையில் கிடைத்தது! சந்தோஷ் பிரதாப் நெகிழ்ச்சி

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? வானதி சீனிவாசன் பதில்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



