ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு மட்டும்! 

நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும்.
ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு மட்டும்! 
Published on
Updated on
2 min read

நில ராசிக்காரர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்.

நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது. நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும். இதில், நில ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

ரிஷபம் - கன்னி - மகரம் ஆகிய ராசிகள் பஞ்ச பூத தத்துவத்தில் நில ராசிகளில் வரும். இதில் ரிஷபம் ஸ்திர நிலம் என்றும் - கன்னி உபய நிலம் என்றும் - மகரம் சர நிலம் என்றும் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று ராசிகளுக்கும் உள்ள அதிபதிகள் (புதன் - சுக்கிரன் - சனி) ஒரே பிரிவில் வருவார்கள். சனி தான் இவர்களில் பிரதானமாக இருந்து செயல்படுவார். இந்த ராசிக்காரர்கள் எதையும் எளிதில் நம்பும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுவான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்தால் சும்மா அதிரும் பாருங்க. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சும்மாவா சொன்னார்கள். 

இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

இவர்கள் தினமும் ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை வணங்கி வந்தாலே போதுமானது. வேறு பெரிய பரிகாரங்கள் இவர்களுக்கு தேவையில்லை.

காவல்தெய்வம்
பைரவர் - நந்தீஸ்வரர் - கருடன் - ஆஞ்சநேயர் போன்ற சுற்றுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் மற்றும் கிராமங்களில் காவல் தெய்வங்களாக இருக்கும் தெய்வங்களை வணங்கி வர வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com