தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!

கும்ப ராசிக்காரர்களே இன்றும், நாளையும் உங்களுக்குச் சந்திராஷ்டமம். அடுத்த இரண்டு நாட்களுக்கு யாகாவார் ஆயினும் நாகாக்க

News image
Updated On :24 மே 2018, 8:04 am

தினமணி

கும்ப ராசிக்காரர்களே இன்றும், நாளையும் உங்களுக்குச் சந்திராஷ்டமம். அடுத்த இரண்டு நாட்களுக்கு யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு என்ற குறளை மனதில் இருத்தி நடந்துகொள்ளவேண்டுமாம் கும்ப ராசி அன்பர்கள்.

சந்திராஷ்டமம் என்றதும், பயந்து நடுங்க தேவையில்லை. இன்றைய நாளில் செய்யும் பணிகள் அனைத்தும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒருவித எச்சரிக்கை மட்டுமே.

Story image

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம். இவ்வாறு சந்திரன் நிலைபெறும் காலம் இரண்டே கால் நாள்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது எட்டாமிடத்தையும் குறிக்கும்.

சந்திரனை "மனோகரன்' என்றும் போக்குவரத்துக்குக் காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடைய கிரகம். அந்த மனோகரன் 8-இல் மறையும்போது மன உளைச்சல், கோபம், ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற எதிர்மறையான குணங்களைத் தருவார். இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டிலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. 

Story image

இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சந்திராஷ்டமம் என்பது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் ஒரு சிறு தோஷம். 

சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ள எளியப் பரிகாரம்

காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு மூன்று முறை வலம் வந்து, பின்பு அன்றாடம் பணிகளை செய்யத் துவங்கலாம்.

சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவைத் தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும். அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும் நன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.