மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவை பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தை ஏற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ணத் தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவின் தொடக்க நாளான திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை தங்கக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
காலை 9.15 மணிக்கு சித்தர் பீடம் வந்த அடிகளார் பாதபூஜை செய்து வரவேற்கப்பட்டார். பகல் 12.30 மணிக்கு ஈர உடையுடன் வந்த அடிகளார் மூலவர் அம்மன் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார்.
பிறகு மகிஷாசுரமர்த்தினி போலவும், அசுரர் மற்றும் 3 முனிவர்கள் போலவும் வேடமணிந்த சிறுவர்களை அழைத்து வந்து அகண்ட தீபத்தை கையில் கொடுத்து சித்தர் பீடத்தை வலம்வரச் செய்தார். அவ்வாறு சுற்றி வந்த அகண்ட தீபத்துக்கு பல்வேறு வகையில் திருஷ்டிகள் செய்யப்பட்டிருந்தன.
பிரகாரத்தின் முன்புறமாக தாமரைச் சக்கரம் அமைத்து அதைத் தொடர்ந்து பிரதட்சணமாகத் தொடங்கி முக்கோணம், அறுகோணம், செவ்வகம், எண்கோணம், வட்டம் போன்ற சக்கரங்கள் அமைத்து அவற்றின் மேல் அதே வடிவத்தில் அமர்ந்திருந்த கன்னியர்கள், சிறுவர், சிறுமியர், நடுத்தர இளம் மற்றும் மூத்த சுமங்கலி கைகளில் வெவ்வேறு விளக்குகள் ஏற்றி வரவேற்க, அகண்ட தீபம் பிரகாரத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து அனைத்து சந்நிதிகளுக்கும் வலம் வந்த அகண்ட தீபம், கருவறையின் தென்கிழக்கில் உள்ள அக்னி மூலையில் தனி மேடையில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் செயயப்பட்டன. அதன்பின்னர் அடிகளார் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதைத் தொடர்ந்து திருஷ்டிகள் எடுக்கப்பட்டன. லட்சார்ச்சனை, பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றன.
புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 4 மணிக்கு ஓம்சக்தி பீடத்தின் முன்பு 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட சிறிய யாக குண்டங்களிலும், பெரிய யாக குண்டத்திலும் கற்பூரத்தை ஏற்றி அடிகளார் நவராத்திரி விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த அமாவாசை வேள்வி பூஜை நள்ளிரவு வரை நடைபெற்றது. திங்கள்கிழமை தொடங்கி, வரும் 19ஆம் தேதிவரை அம்மன் சிலைக்கு பல்வேறு காப்புகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் ஸ்ரீதேவி ரமேஷ், கோ.ப.செந்தில்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு மற்றும் அகண்ட தீப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளைஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் சென்னை மாவட்ட சக்தி பீடங்களும், மன்றங்களும் செய்திருந்தன.
மாரியம்மன் கோயிலில்...
செங்கல்பட்டு, அக். 8: செங்கல்பட்டை அடுத்த அம்மணம்பாக்கம் சமயக்கொல்லைமேடு கிராமத்தில் உள்ள மகமாயி சுயம்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 20ஆம் ஆண்டு நவராத்தி விழா திங்கள்கிழமை யாகபூஜையுடன் தொடங்கியது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இக்கோயிலில் திங்கள்கிழமை பிற்பகல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், நடைபெற்றது. கலசம் நிறுத்தப்பட்டு அதில் அம்மனை எழுந்தருளச் செய்வதற்காக யாக பூஜை நடைபெற்றது. உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
அம்மன் முன்னிலையில் நடைபெற்ற யாகபூஜையில் விநாயகர் பூஜை, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, நவசக்தி பூஜை, சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
பூஜையையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் கண்ணுசாமி, அமிர்தம் அம்மாள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


