கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சீரடியில் மூன்று நாட்களில் ரூ.5.9 கோடி காணிக்கை 

மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு..

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:47 am

மகாராஷ்டிரா சீரடி பாபா கோயிலில் பாபா சாமாதியடைந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பக்தர்கள் 5.9 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

பாபாவின் புகழ்பெற்ற கோயிலான சீரடியில் பாபா சமாதியடைந்த நூற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில், இந்த மூன்று நாளில் மட்டும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதில், கோவிலுக்குக் காணிக்கையாக ரூ.5.9 கோடி ரூபாயை பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதில், உண்டியல் வசூல், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை அடங்கும் என்று சாய்பாபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.