குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15.29 லட்சம் வசூலானது.
காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட பிரசித்தி பெற்ற கோயிலாக குமரகோட்டம் முருகன் கோயில் விளங்கி வருகிறது. இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தைத் தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி ஆகிய நாள்களில் இக்கோயிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இக்கோயில் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 12-ஆம் தேதி எண்ணப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமைன்று காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் (வேலூர்) விஜயா, செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வர் அலமேலு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
இதில், 70 கிராம் தங்கம், 577 கிராம் வெள்ளியுடன், 12 லட்சத்து 29 ஆயிரத்து 370 ரூபாய் வசூலானது என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






