மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்யம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வியாழக்கிழமை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்பட்டது.

உச்சிப்பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்ய எடுத்துச்செல்லப்படும் கொழுக்கட்டை.

Published On :


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வியாழக்கிழமை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1, 242 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 
இந்து சமய பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழாவாகும். நிகழாண்டு செப். 13 ஆம் தேதி வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகரப் பகுதிகளில் 212 சிலைகள், ஊரகப் பகுதிகளில் 1030 சிலைகள் என மொத்தம் 1,242 சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல் துறை அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை குறிப்பிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு ஹோமம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றது. சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. செப். 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் ராட்சத கொழுக்கட்டை : திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுவது வழக்கம். இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் பிரத்யேகமாக தலா 75 கிலோ எடையுடன் இரண்டு ராட்சத கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுவது வழக்கம். நிகழாண்டிலும், ஒரு ராட்சத கொழுக்கட்டையை தூளியில் தூக்கிச்சென்று உச்சிப்பிள்ளையார் கோயிலில் வைத்து நைவேத்யம் செய்யப்பட்டது. இன்னொரு ராட்சத கொழுக்கட்டையை மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் சந்நிதியில் வைத்து நைவேத்யம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.