யாருக்கு சுகப்பிரசவம்? யாருக்கு சிசேரியன்? ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

யாருக்கு சுகப்பிரசவம்? யாருக்கு சிசேரியன்? ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
யாருக்கு சுகப்பிரசவம்? யாருக்கு சிசேரியன்? ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
Updated on
2 min read

1. ஒரு பெண்ணின் கருவறையின் / கருப்பை (WOMB) அமைப்பைப் பற்றிக் கூறுவது சுக்கிரன் கிரகம். அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்குவது செவ்வாய் கிரகம் ஆகும். 

சனியுடன் சேர்ந்த செவ்வாய் ஒரு பெண்ணின் ஜனன கால லக்னத்தின் 5-ம் வீட்டோடு சம்பந்தப்பட்டால், கருவறையை பாதுகாப்பது என்பது நடவாதது. இது சம்பந்தமாக, சில உதாரண ஜாதகங்களைக் காணலாம். 

2. கீழுள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டு அதிபதியான சுக்கிரன் - சூரியன், தேய் பிறை சந்திரன், கேது மற்றும் சனி போன்ற இயற்கைப் பாவர்களுக்கு இடையில் சூழ்ந்து இருப்பதால், அது பாப கர்தாரி யோகம் ஏற்படுகிறது. உதாரண ஜாதகம்

(கருப்பையை அகற்றச் செய்யும் ஜாதகம்)

3. இந்த ஜாதகியின் நோய் காரகரான புதன் நவாம்சத்தில் உச்ச வர்கோத்தமம் பெறுவதால் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக 
புதன், கருவறைக்கு காரகரான, 5-ம் வீடு அதிபதி ஆன மற்றும் பெண் கிரகமான சுக்கிரன் உடன் இணைவு பெற்று இருப்பது, மகளிர் சம்பந்தமான பிரச்னை உள்ளது என்பதனை சுட்டிக் காட்டுகிறது. 

4. இதுபோல ஏராளமான எதிர்மறைப் பிரச்னைகளை கொண்டுள்ளதால் இந்த பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை அகற்ற, புதன் தசையில் புதன் புத்தியில் கட்டாயம் மேற்கொள்ளப்பட வைத்தது. 

5. கஷ்ட பிரசவ யோகம் ஜனன கால ஜாதகத்தில் உள்ள சந்திரனைக் கொண்டும் மற்றும் 4 அல்லது 7-ம் வீட்டில் இயற்கை பாபர்களான சூரியன், செவ்வாய், சனி, மற்றும் பாபர்கள் துணைகொண்ட புதன், இருப்பின் அந்த தாயானவள் பிரசவ நேரத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். 

(அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்)

6. மேற்படி ஜாதக அமைப்புள்ள ஜாதகி மகர லக்கினத்தில் பிறந்துள்ளார். நான்காம் இடமான சுகஸ்தானத்தில், செவ்வாய். ஆனால், உச்சம் பெற்ற சனியின் பார்வை ஆட்சி பெற்ற, சக்தி வாய்ந்த செவ்வாய்க்கு கிடைத்துள்ளது. அந்த பாவம் மார்பு மற்றும் இதயத்தைக் குறிக்கும் ஏனெனில் அது லக்கினத்துக்கு நான்காம் பாவம். அந்த பெண்ணுக்கு இதய வாத நோய் இருப்பது இதன் மூலம் உறுதி ஆகிறது. மேலும், இதய பகுதியை ஆளும் சுக்கிரன், ரோகாதிபதியான புதனுடன் இணைந்து, லக்கினத்தில் 
இருப்பதால் இந்த ஜாதகி பிறந்த நாள் தொட்டு இதய நோயால் பாதிக்கப்படுபவர் என்பதும் உறுதி ஆகிறது. 

7. பிரசவ நேர வலிக்கு (LABOUR PAIN) காரகரான சந்திரனை, சனி மற்றும் செவ்வாய் தொடர்புள்ளதால், பிரசவ கால வலி சரியான நேரத்தில் ஏற்படாது. அதனால் குழந்தை பிறப்பு என்பது சற்று கடுமையானது. 6-ஆம் அதிபதியான புதன், புத்திர பாக்கியத்தை அளிக்கும் 5-ஆம் அதிபதியான சுக்கிரன், அவர் நிற்கும் ராசி சர ராசியும் ஆவதால், குழந்தை இழப்பு அல்லது கரு கலைப்பை உருவாக்கும். இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் இது நன்றாகவே தெரிகிறது இப்படிப்பட்ட தாய்மை அடையும் ஜாதகிக்கு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் பிரசவம் ஏற்படும். 

8. பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், மறு பிறப்பு. 10 மாத தவம் செய்து ஒரு புது உயிரைப் பூமிக்குக் கொண்டு வரும் பரபரப்பு தான். எல்லாப் பெண்களுக்கும் சுகப் பிரசவம் சாத்தியம் ஆவதில்லை தான். பல்வேறு காரணங்களால் சில சிசேரியனில் தான் பிறக்கிறது. சரித்திரத்தில் காணும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிசேரியன் முறை இருந்திருக்கிறது. ரோமானிய பேரரசர் சீசர் அப்படிப்பட்ட அறுவைசிகிச்சை மூலம் தான் பிறந்தவர் என்கிறது வரலாறு. 

9. ஆனால் இன்று நடப்பதோ வேறு, பல பெண்கள், சிசேரியனே வலி இல்லாத பிரசவத்துக்குச் சிறந்த வழி, என, சுகப்பிரசவ வாய்ப்பு இருந்தும் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் செய்து கொள்கின்றனர். பொதுவாக, சுகப்பிரசவத்தில், சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும் என சில மருத்துவர்கள், கூற கேட்டதுண்டு. சிலர் சில, ஜோதிடர்களிடம் அணுகி குழந்தைப் பிறப்பைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் ஆராய்ந்து நல்ல நாள் மற்றும் நேரத்தில் சிசேரியன் செய்யச் சொல்லி மருத்துவர்களை சம்மதிக்கவைத்துச் செய்பவர்களும் உண்டு. 

இந்தக் கட்டுரை, ஜோதிட ரீதியாக எந்த பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்படும் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதனைப் பற்றியும் புரிதல் ஏற்படவே ஆகும். இந்தக் கட்டுரை மேலும் வளரும்.

- ஜோதிட ரத்னா தையர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com