வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அத்திவரதர் தரிசனம் இன்று 3 மணி நேரம் ரத்து!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு..

News image
Updated On :15 ஆகஸ்ட் 2019, 11:56 am IST


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு அத்திவரதர் தரிசனம் 3 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமையான இன்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது. 

கருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் பகல் 12 மணிக்கு மூடப்படுகிறது. 12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 

வெள்ளிக்கிழமை (ஆக. 16) மாலை  4 மணியுடன் பொதுதரிசனம் உள்பட வி.ஐ.பி, வி.வி.ஐ.பி.தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார்.

அத்திவரதரை தரிசிப்பதற்கான காலநீட்டிப்பு  எதுவும் கிடையாது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ம் தேதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.