பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவத்தின் 2-ம் நாள் இன்று! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ திருவிழா நேற்று துவங்கியுள்ளது. 

News image
Updated On :22 ஜனவரி 2019, 7:30 am

DIN

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ திருவிழா நேற்று துவங்கியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மூன்று நாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழங்கம். அதன்படி நேற்று இரவு 7.00 மணிக்கு தெப்போற்சவ திருவிழா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், அனந்தசரஸ் என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் பெருமாள் எழுந்தருளினார். 

முதல் நாளான நேற்று தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரண்டாம் நாள் என்பதாம் ஐந்து முறை வலம் வருவார். மூன்றாம் நாளான நாளை ஏழுமுறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.