அனைவரும் ஜோதிடர் ஆகலாம் எளிதில்: சர்வாஷ்டக முறையில் ஜாதகரின் பலாபலன்கள்!! 

ஒரு ஜாதகரின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி சர்வாஷ்டக முறைப்படி கடந்த வாரம் அறிந்தோம். தற்போது,
அனைவரும் ஜோதிடர் ஆகலாம் எளிதில்: சர்வாஷ்டக முறையில் ஜாதகரின் பலாபலன்கள்!! 
Updated on
4 min read


கடந்த வாரம் மாதிரி வடிவமைப்புக்கான ஒரு ஜாதகரின் தகவல்களை வைத்து பலனைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் பல தகவல்களைக் காண இருக்கிறோம். 

மேற்கண்ட ஒரு ஜாதகரின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி சர்வாஷ்டக முறைப்படி கடந்த வாரம் அறிந்தோம். தற்போது, அதே ஜாதகரின் வெவ்வேறு பலன்களை சர்வாஷ்டக முறையில் காணப்போகிறோம்.  

1. இந்தக் கட்டுரையில் முதலாவதாக, ஜாதகருக்கு தன்னம்பிக்கை உள்ளதா அல்லது எங்கும் எதிலும் பயம் இருப்பதால் துணை, ஆதரவு தேவைப்படுகிறதா என அறியலாம். அதற்கு, நீங்கள் ஜாதகரின் லக்கினத்தில் உள்ள சர்வாஷ்டக பரல்களையும் 8 ஆம் இடத்தில உள்ள பரல்களையும் (ஆங்கிலத்தில் Benefic Points ) அதாவது நல்லது செய்யும் 
புள்ளிகள் மட்டும் எடுத்து எழுதிக்கொள்ளவும். 

2. தற்போது, லக்கினத்தில் கொண்ட புள்ளிகள் அதிகமாயிருப்பின், அந்த ஜாதகர் நிறைந்த தன்னம்பிக்கை உடையவர் என்றும், அவருக்குப் பயம் இல்லாமல் போவதோடு, எங்கும் எதிலும் துணை, ஆதரவு தேவை இல்லை என அறியவும். அதுவே, 8ஆம் இடத்து புள்ளிகள் அதிகமாக இருப்பின், அந்த ஜாதகர் குறைந்த தன்னம்பிக்கை உள்ளவர் என்றும் அவர் எங்கும் எதிலும் பயம் கொள்ளுவார் அதனால், அவருக்குத் துணை/ஆதரவு தேவைப்படும் என்றும் அறியலாம். மேற்படி உதாரண ஜாதகத்தின்படி அந்த ஜாதகர், லக்கினத்தில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளதால், அவருக்கு நிறையத் தன்னம்பிக்கையும் எதிலும் பயம் இல்லாமலும் இருக்கும் என அறியமுடிகிறது .

3. அடுத்ததாக, ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவு நியாயமாக இருக்குமா அல்லது நியாயம் இல்லாமல் போகுமா என்பதனை அறியலாம். அதற்கு, ஜாதகரின் லக்கினத்தில் உள்ள சர்வாஷ்டக பரல்களையும் 4ஆம் இடத்தில் உள்ள பரல்களையும், அதாவது நல்லது செய்யும் புள்ளிகள் (BP ) மட்டும் எடுத்து எழுதிக்கொள்ளவும். 

4. தற்போது, லக்கினத்தில் கொண்ட புள்ளிகள் 4ஆம் இடத்தில் உள்ள பரல்களைக்காட்டிலும் அதிகமாயிருப்பின், அந்த ஜாதகர் தமது ஆத்மா சொல்படி நடப்பவர் என்றும் அதனால் அவர் எடுக்கும் முடிவு நியாயம் மிக்கதாக இருக்கும் என அறியலாம். அதுவே 4ஆம் இடத்து புள்ளிகள் லக்கினத்தை விட அதிகமாக இருப்பின் அந்த ஜாதகர், தன் அறிவு சொல்படி நடப்பவர் என்றும் அவர்தாம் எடுக்கும் முடிவுகள் நியாயம் இருக்காது என்றும் உணரலாம். மேற்படி உதாரண ஜாதகத்தின்படி அந்த ஜாதகர், லக்கினத்தில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளதால், அவர் ஆத்மா சொல்படி நடப்பவர் என்றும் அதனால் அவர் எடுக்கும் முடிவு நியாயம் மிக்கதாக இருக்கும் என அறியலாம். 

5. தற்போது ஒரு ஜாதகரின் வருமானம் மற்றும் அவர் செய்யும் செலவுகளைப் பற்றி ஆராய்வோம். அதற்கு, ஜாதகரின் லக்கினத்திற்கு அடுத்ததான இரண்டாம் இடத்தில் உள்ள சர்வாஷ்டக பரல்களையும் 12ஆம் இடத்தில் உள்ள பரல்களையும், அதாவது நல்லது செய்யும் புள்ளிகள் மட்டும் எடுத்து எழுதிக்கொள்ளவும். 

6. ஒரு ஜாதகத்தில், இரண்டாம் இடத்தில் உள்ள புள்ளிகள் 12 ஆம் இடத்தில் உள்ள புள்ளிகளைக்காட்டிலும் அதிகமாயிருப்பின், அந்த ஜாதகரின் வருமானம் ஒருவழிக்கு மேற்பட்டதாகவும் அல்லது ஒரு வழிக்கு மேற்பட்ட வருமானம் பெறும் அதிக திறன் பெற்றவராயும் இருப்பார். அதுவே, 12ஆம் இடத்துப் புள்ளிகள், இரண்டாம் இடத்து 
புள்ளிகளைக் காட்டிலும் அதிகம் பெற்றவராயின் அந்த ஜாதகரின் வருமானம் பலவழிகளில் வீண் செலவாகும் / விரயமாகும் எனக் கொள்ளலாம்.

7. இனி ஒரு ஜாதகர், தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமா அன்றி அதிக விருப்பம் கொண்டவரா என அறியலாம். அதற்கு ஒரு ஜாதகரின் லக்கினத்துக்கு 3ஆம் பாவம் பெற்ற மொத்த புள்ளிகளையும் 11ஆம் பாவத்தில் பெற்ற புள்ளிகளையும் கொண்டு அறியலாம்.

8. 3ஆம் பாவம் பெற்ற மொத்த புள்ளிகள் அதிகமாக இருப்பின் அந்த ஜாதகருக்கு அதிக விருப்பங்கள் / ஆசைகள் இருக்கும் அல்லது எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அறிய வேண்டிய ஒன்று அவரின் அனைத்து ஆசைகளும் நிறைவேறாது என்பதே ஆகும். அதுவே 11 ஆம் பாவத்தில் பெற்ற மொத்த புள்ளிகள் 3 ஆம் பாவத்தை விட அதிகமாக 
இருப்பின் அந்த ஜாதகரின் அனைத்து ஆசைகள் / விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் நிறைவேறும் எனலாம். 

9. அடுத்து, ஒருவரின் மகிழ்ச்சி அதிக செயல் / வேலைகளுக்குப் பிறகு கிடைக்குமா அல்லது குறைந்த செயல்பாடு / வேலைகளால் கிடைக்க பெறுமா என அறிய முடிகிறது. அது, ஜாதகரின் லக்கினத்துக்கு 4ஆம் பாவம் பெற்ற மொத்த புள்ளிகளையும் 10ஆம் பாவத்தில் பெற்ற புள்ளிகளையும் கொண்டு அறியலாம்.

10. 4ஆம் பாவம் பெற்ற மொத்த புள்ளிகள் அதிகமாக இருப்பின் அந்த ஜாதகருக்கு குறைந்த வேலை / செயல்பாட்டில் அதிக மகிழ்ச்சியைப் பெறுவார் என்றும் அதுவே 10 ஆம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பார் ஆயின் அவர் மகிழ்ச்சி பெற நிறையச் செயல் / வேலைகளைச் செய்ய வேண்டி வரும். 

11. ஒரு ஜாதகருக்கு எதிரிகள் இருப்பார்களா அல்லது ஜாதகருக்கு உதவ நண்பர்கள் புடைசூழ இருப்பார்களா என அறிய லக்கினத்துக்கு 6ஆம் பாவமும் 11 ஆம் பாவமும் 
கொண்டு அறியலாம். 

12. ஆறாம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் அதிகமான எதிர்ப்பு இருக்கும். மறைமுகமான எதிரிகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அதுவே 11 ஆம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பின் நல்ல நண்பர்கள் புடைசூழ இருப்பதோடு எதிரிகள் அற்றவர் என்றே கூறலாம். மேலும் அவர் எதையும் எளிதாக எடுத்துச் செல்பவர் என்றும் அறியலாம். 

13. ஒரு ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவரா அன்றி அதிக முயற்சி செய்து வெற்றி காண்பவரா என்பதை அறிய 9ஆம் பாவம் அதிகம் புள்ளிகளைப் பெற்றிருப்பின் அவர் 
அதிர்ஷ்டத்திற்குக் காத்திருக்கும் நபர் மற்றும் அதிக அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். ஆனால் அதுவே 12ஆம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பின் அதிக முயற்சி செய்து சிரமப்பட்டு மகிழ்ச்சி பெற வேண்டியதாய் இருக்கும். அதனால் இவர் அதிக சிரமப்படும் நபர் என்றே கூறினால் மிகையாகாது. 

14. இனி ஒரு ஜாதகர் பிறந்த இடம் விட்டு வெளிநாட்டில் / மாநிலத்தில் / நகரத்தில் வாசிக்க வேண்டி வருமா அல்லது பிறந்த இடத்திலேயே வசிக்கும் தன்மை / நிலைமை பெற்றவரா என இந்த சர்வாஷ்டக முறைப்படி கிடைக்கும் புள்ளிகளைக் கொண்டு அறியலாம். அதாவது 4ஆம் பாவத்தில் அதிக புள்ளிகளை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் 
தோன்றிய / பிறந்த இடத்திலேயே / தாய் மண்ணிலேயே வசிக்க வேண்டி வரும். அதுவே 9 ஆம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தால் பிறந்த இடத்தை விட்டு, தாய் 
தந்தையரை, உறவினரை விட்டு வேறு மாநிலத்திலோ / நகரத்திலோ ஏன் வெளி நாட்டிலே கூட வாசிக்க வேண்டி வரும் என்பதை காண முடியும். 

15. ஒருவரின் ஜாதகத்தில், 4ஆம் பாவத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பார். ஆனால், அந்த ஜாதகருக்கு உறவினர்களின் உதவி கிடைக்கப் பெறுவார். அதுவே 6 ஆம் பாவம் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தால் நிச்சயம் உறவினரிடமிருந்து உதவிக் கிடைக்க பெற இயலாது. 

16. ஒரு ஜாதகருக்கு அவர் தம் சர்வாஷ்டக வர்க்கத்தில் 5ஆம் பாவத்தில் 7ஆம் பாவத்தை விட அதிக புள்ளிகளை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு, அவரின் மனைவி அடங்கி நடப்பார் அல்லது அவரின் பிடியில் அவரின் மனைவி இருப்பார் எனலாம். அதுவே 7ஆம் பாவத்தில் அதிக புள்ளிகளை ஒரு ஜாதகர் பெற்று இருப்பார் என்றால், 
அந்த ஜாதகருக்கு வாய்க்கும் மனையின் சொல் கேட்டு நடக்கும் அல்லது தலை ஆட்டி நடக்கும் நிலை ஏற்படும் என்றே கருதவேண்டி வரும். 

17. இதுபோன்று நிறைய பலன்களை சர்வாஷ்டக முறைப்படி ஒவ்வொரு ஜாதகரும் பெறும் நிலை எவ்வாறு என்பதை பாமரரும் / ஜோதிடம் பற்றி அறியாதவரும் எளிதாக அறிய முடியும் என்பதை விளக்கவும் ஜோதிடரின் துணையின்றி அதனை அறிந்து தம்மை காத்துக்கொள்ளவும் / எதிர்கொள்ளவும் இது பயன்பெறும்  என்றே 
இக்கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன். 

18. மேலும் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை வைத்து தங்களால் அறிய முடியாதவற்றை சிறந்த ஜோதிட அறிவும், அனுபவமும் பெற்றோரை நாடி பயன் பெறுங்கள். எப்படி ஒரு மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை / நோய்களை ஸ்கேன் போன்ற வற்றால் காண முடிந்து அதற்கு தீர்வு காண இயலுமோ அதே போன்று ஜோதிடம் மூலமாக அனைத்தையும் முன்னரே அறிந்து தற்காத்து கொள்ளவும், எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுமே அன்றி துவண்டு விடுவதற்காக அல்ல என்பதனை அனைவரும் உணரவும். 

19. சர்வாஷ்டக முறைப்படி மேலும் தகவல்கள் அடுத்த கட்டுரையில் அளிக்க உள்ளேன். அவரவர் வணங்கும் குல தெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் உங்களை, உங்களின் குடும்பத்தாருக்கும், வாழ்வில் எந்த பிரச்னையும் எதிர்கொள்ளாமல் அவைகள் தானாகவே விலகும் என்பதனையும் நம்பிக்கையும், அதற்கேற்ற முயற்சியையும் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

- ஜோதிட ரத்னா தையூர் சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com