தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!

ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ûஸ அபார வெற்றி

News image

மும்பை அணி

Updated On :21 ஏப்ரல் 2026, 4:55 am IST

ஐபிஎல் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ûஸ திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சேர்க்க, குஜராத் 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 4 தோல்விகளுடன் துவண்டிருந்த மும்பை, இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து அதிரடியாக முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் குஜராத் பௌலர் ககிசோ ராபாடாவின் வேகத்தில் மும்பையின் டாப் ஆர்டர் முற்றிலுமாகச் சரிந்த நிலையில், நமன் திர் சற்று கைகொடுக்க, திலக் வர்மா அதிரடி சதத்துடன் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் பௌலிங்கில் அஸ்வனி குமார் மும்பை வெற்றியை உறுதி செய்தார்.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பௌலிங்கை தேர்வு செய்தது. மும்பை இன்னிங்ûஸ தொடங்கியோரில் குவின்டன் டி காக் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, அறிமுக வீரர் டேனிஷ் மலேவர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஒன் டவுனாக வந்த நமன் திர் சற்று நிலைக்க, 4-ஆவது பேட்டர் சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். மும்பை 44 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது களம் புகுந்த திலக் வர்மா, நமன் திர்ருடன் இணைந்தார். இவர்கள் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. நமன் திர் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.

6-ஆவது வீரராக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா துணை நிற்க, திலக் வர்மா பேட்டிங்கில் தாண்டவமாடினார். 5-ஆவது விக்கெட்டுக்கு இவர்கள் கூட் டணி 81 ரன்கள் சேர்த்தது.

பாண்டியா 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் திலக் வர்மா 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 1 ரன்னுடன் துணை நின்றார்.

குஜராத் பௌலிங்கில் ககிசோ ரபாடா 3, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 200 ரன்களை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக அமைந்தது. கேப்டன் ஷுப்மன் கில் 3 பவுண்டரிகளுடன் 14, ஷாருக் கான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, ககிசோ ரபாடா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.

சாய் சுதர்சன் 0, ஜாஸ் பட்லர் 5, கிளென் ஃபிலிப்ஸ் 6, ராகுல் தெவாதியா 8, ரஷீத் கான் 4, முகமது சிராஜ் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முடிவில் அசோக் சர்மா 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றார்.

மும்பை பௌலிங்கில் அஸ்வனி குமார் 4, கஸôன்ஃபர், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 2, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.