கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜூலை 16-ல் திருப்பதி செல்பவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் ரத்து! ஏன்?

தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.

News image
Updated On :9 ஜூலை 2019, 7:38 am

தினமணி


தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன.

ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட உள்ளது.

மேலும் பௌர்ணமி தினமான அன்று மாலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. எனவே அன்று காலை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 

எனவே, நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தர்ம தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன் ஆகியவை 16-ஆம் தேதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.