செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Published On :31 ஜனவரி 2024, 12:57 pm IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க் கிழமைகளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

அப்போது கருவறையில் உள்ள பொருள்கள் வெளியேற்றப்பட்டு, தரிசன வரிசைகள், உயர்மட்டப் படிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க் கிழமையான ஏப்ரல் 2-ம் தேதி ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அன்று ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.