திருப்பதிக்கு நடைபாதை மாா்க்கத்தில் வரும் பக்தா்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
திருமலையில் இன்று முதல் அக்டோபர் 5 வரை திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து..


திருமலையில் இன்று முதல் அக்டோபர் 5 வரை திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 5-ம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை நடைபெற உள்ளது.
அதைத் தொடா்ந்து, பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் 3-வது வார சனிக்கிழமையும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. அப்போது பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும்.
அதனால் தேவஸ்தானம் அக்டோபர் 3, 4, 5 உள்ளிட்ட தேதிகளில் நடைபாதை மாா்க்கத்தில் வரும் பக்தா்களுக்கு அளிக்கும் திவ்ய தரிசன டோக்கன்களும், தா்ம தரிசன பக்தா்களுக்கு வழங்கும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...