ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் நவராத்திரி உற்சவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலிலும், திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி..

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 8:08 am

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலிலும், திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.

உற்சவத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு முதல் மாலை 3.30 மணி வரை ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபத்தை அடைகிறாா். 7.45 மணிக்கு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

பின்னா் 9.45 மணிக்கு கொலுமண்டபத்திலிருந்து புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

நவராத்திரி விழாவின் 7-ம் திருநாளான அக்டோபா் 5-ம் தேதி வருடத்தில் ஒரு நாள் மட்டும் தரிசனம் கிடைக்கும் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடி சேவை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

திருவானைக்கா கோயில்

திருவானைக்கா கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை முதல் நாளன்று மாலை 6 மணிக்கு அம்மன் ஏகாந்த காட்சியில் கொலு மண்டபத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தார். 

இதை போல் அக்டோபா் மாதம் 8-ம் தேதி வரை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ.மாரியப்பன் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.