இன்று பங்குனி அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய நாள்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. அதாவது,
சதுர்த்தி - விநாயகருக்கு
சஷ்டி - முருகனுக்கு
ஏகாதசி - மகாவிஷ்ணுவிற்கு
அஷ்டமி - பைரவருக்கு
சதுர்த்தசி - சிவனுக்கு
பௌர்ணமி - அம்மனுக்கு
இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி உள்ளது அதுதான் அமாவாசை.
அமாவாசையன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்திற்கு வரவழைத்து, அவர்களின் பசி, தாகம் தீர எள் கலந்த நீரை தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள் கலந்த நீரை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தைத் தணித்துக்கொள்கிறார்கள்.
தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும்.
ஆகவே, அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும், தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

தொடர்ந்து சரியும் தங்கம் விலை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



