திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!

வேத ஜோதிடத்தில் ஒரு விதி கோட்பாட்டைக் கொண்டு பயணம் செய்யக்கூடாது பல..
திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!

 
திதி சூன்யம் என்றால் என்ன?

வேத ஜோதிடத்தில் ஒரு விதி கோட்பாட்டைக் கொண்டு பயணம் செய்யக்கூடாது பல விதிகளுடன் கூடிய  சூட்சமங்கள் உள்ளடங்கியுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் அடைந்திருக்கும். ஆனால், உச்ச பலனைப் பெற்றிருக்காது ஒருவித நீச்ச பலனை பெற்றிருக்கும். அதற்குப் பல காரணிகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றான திதி, சூன்யம் என்பது ஒரு சூட்சம விதி. நம்முடைய கணக்குபடி சூன்யம் என்றால் பூச்சியம் (zero) அதாவது வெறுமை என்று அர்த்தம். அதன்படி எல்லா திதிகளும் யோகம் இல்லாமல் அங்குள்ள பாவம் யோகம் பங்கமாகச் செயல்படும்.

சூரியன் சந்திரன் படி திதிகள் பதினைந்தாக உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றில் பிரதமை முதல் திரயோதசி வரை 13 திதிகள் இரண்டு இரண்டு ராசிகளில் சூனியம் அடைகிறது. அவற்றில் சதுர்த்தசி திதி மட்டும் நான்கு ராசிகள் சூனியம் அடைகிறது. சூனியம் அடைந்து பாவங்கள் மற்றும் சூனிய அதிபதிகள் ஒட்டுமொத்த சக்தியும் (Power) இழந்துவிடும் என்பது அர்த்தம். அதற்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை (Positive & negative) பக்கங்களைப் பார்ப்போம்.

திதியை சூனியமாக்கும் ராசிகள் அதன் அதிபதிகள் யார் யார்?

ஜனன ஜாதகத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரு யோக திதி அமைந்திருக்கும். அந்த யோக திதிகள் எந்தெந்த ராசியில் எந்தெந்த அதிபதிகள் திதி சூனிய அடையும் என்பதைக் கீழே பார்ப்போம். 

திதிகள்சூனிய ராசிகள்சூனிய ராசிகள் அதிபதிகள்  
பிரதமைதுலாம்-மகரம் சுக்கிரன்-சனி 
துதியை தனுசு-மீனம் குரு  
திருதியைமகரம்-சிம்மம்சனி-சூரியன்
சதுர்த்தி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்
பஞ்சமிமிதுனம்-கன்னி புதன்
சஷ்டிமேஷம்-சிம்மம் செவ்-சூரியன்        
ஸப்தமி தனுசு-கடகம் குரு-சந்திரன்     
அஷ்டமி மிதுனம்-கன்னி புதன்
நவமிசிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
தசமிசிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்       
ஏகாதசிதனுசு-மீனம் குரு        
துவாதசிதுலாம்-மகரம் சுக்கிரன்-சனி        
திரயோதசிரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்
சதுர்த்தசிமிதுனம்-கன்னி தனுசு-மீனம்    புதன்-குரு  

ஜனன ஜாதகத்தில் முதலில் ஜாதகர் எந்த திதியில் பிறந்திருக்கிறார், அந்த திதி எந்தெந்த ராசி சூனியம் அடையச்செய்கிறது, அங்கு அமர்ந்த கிரகங்கள் என்னென்ன? அவர்கள் யோகரா அவயோகரா, திதி சூனிய அதிபதிகள் எங்கெங்கு அமர்ந்து பலத்தை இழக்கச் செய்கிறார்கள் என்று வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும். 

திதி சூனியம் விதிப்படி எப்படி வேலை செய்கிறார்கள் என்று பார்ப்போம். 

லக்கினாதிபதியே சூனிய ராசியில் அமர்ந்தால் மிகவும் கெடுபலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். எடுத்துக்காட்டாக பிரதமை திதியில் பிறந்தவருக்கு சூனிய வீடு என்பது மகரம் மற்றும் துலாம் அவற்றின் சூனிய அதிபதிகள் சனி மற்றும் சுக்கிரன் ஆவார். ஜாதகர் மகர லக்கினமாக, சனி லக்கினத்தில் இருந்தால் ஜாதகருக்கு முதல் பாவம் கெட்டுவிடும் லக்கினாதிபதி மற்றும் சூனிய அதிபதியான சனி ஜாதகரை ஒரு ஆட்டு ஆட்டுவிப்பர். அவருக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்னைகள் ஏற்படும் என்பது ஒரு விதி. 

திதி சூன்ய கிரகங்கள் ஆட்சி, உச்சம், கேந்திர, திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிக்கும் என்று தப்புக் கணக்குப் போடக்கூடாது. திதி சூனியம் பெற்ற ராசிகள் மற்றும் அங்கு அமர்ந்த சுபக்கிரகங்கள் மற்றும் யோகர்கள் கெட்ட பலன்களைத்தான் தருவார்கள். 

ஒருவரது லக்கினாதிபதி யோகராக இருந்தாலும் முக்கியமாக அவர் நல்ல பாவங்கள் என்று கூறும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ல் அமர்ந்துவிட்டால் அவர் அவயோகரா பலம் இழந்து செயல்படுவார். எடுத்துக்காட்டாக 2, 7-ம் பாவம் திதி சூனியம் பெற்றால் குடும்ப வாழ்க்கை, தனம், கூட்டு வியாபாரம் அனைத்தும் பிரச்னையில் முடியும். 

திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் அதன் உண்மையான காரக பலத்தை இழந்துவிடும். எடுத்துக்காட்டாகப் புதன் சூனியம் பெற்றால் அறிவு கெட்டுப் படிப்பில் தடை, தொழிலில் சிந்தித்துச் செயல்படும் தன்மை அற்றவனாகச் செயல்படுவான். 

திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.

திதி சூனியம் எப்பொழுது எதிர்மறையாக வேலை செய்து நன்மைகள் ஏற்படுத்தும் என்று பார்ப்போம் ( minus x minus = Plus positive) ஒருவர் ஜாதகத்தில் அவயோகர் என்பவர் திதி சூனியம் ராசியில் அமர்ந்துவிட்டால் அவர் யோகராக மாறிவிடுவார். இதில் கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் அதியோகம் என்ற கோட்பாடு செயல்படும். 
  
ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமியன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகமாக மாறிவிடும். 

திதி சூன்யம் அடைந்த கிரகங்கள் மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12-ல் அமர்ந்தால் ஜாதகருக்கு அந்த கிரகம் அதிக பலம் பெற்றுச் செயல்படும். திதி சூனியம் அடைந்த அந்த  கிரகங்கள் நீச்சமோ, பாவிகளோடு இணைத்தோ, வக்ரமோ அடைந்தால் அவற்றின் கிரக மற்றும் பாவகராகப் பலன்கள் அதிகமாகவே நற்பலன்கள் கிட்டும்.

திதி சூன்ய கிரகங்கள் பலம் பெற அந்தந்த திதிக்குரிய கடவுளை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடையாளம். 

குருவே சரணம்.

- ஜோதிடசிரோன்மணி பார்வதி தேவி

whats App: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com