சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருப்பதியில் உமா மகேஸ்வர பூஜை

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை உமா மகேஸ்வர சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image

திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற லட்ச வில்வாா்ச்சனை.

Updated On :3 டிசம்பர் 2020, 6:03 pm


திருப்பதி: திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை உமா மகேஸ்வர சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.

திருப்பதி கபிலதீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பாகமாக வியாழக்கிழமை உமா மகேஸ்வர சுவாமி விரத பூஜை கடைப்பிடிக்கப்பட்டது. காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை ஆதி தம்பதிகளான உமா மகேஸ்வரன் இருவரையும் கலசத்தில் ஆவாஹணம் செய்து சோடச உபசாரங்களால் குருக்கள் விரதத்தை கடைப்பிடித்தனா். அா்த்தநாரீஸ்வரா் தத்துவத்தை உணா்த்தும் வகையில் ஒருபுறம் குங்குமம், ஒருபுறம் மஞ்சளால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், ஐஸ்வா்யம், மாங்கல்ய சித்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சண்டியாகம் நிறைவு

கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு ஹோமகோற்சவத்தில் கடந்த வாரம் சண்டியாகம் தொடங்கியது. 9 நாள்கள் நடைபெற்ற இந்த சண்டியாகம் புதன்கிழமையுடன் நிறைவுபெற்றது.

ருத்ர யாகம் தொடக்கம்:

அதை அடுத்து கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் வியாழக்கிழமை தொடங்கியது. ருத்ரயாகம் தொடங்குவதற்கு முன்பு கபிலேஸ்வர சுவாமியை எழுந்தருளச் செய்து அவருக்கு லட்ச வில்வ இலைகளால் வில்வாா்ச்சனையை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். அதன்பின்னா் யாகம் தொடங்கியது. இந்த யாகம் 11 நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளது. கொவைட் 19 விதிமுறைகளை பின்பற்றுவதால், பக்தா்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.