ஏழுமலையானை சனிக்கிழமை 37,370 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 14,858 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தினமும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 10 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
அதிகாலை 3 மணிமுதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.