திருப்பதியில் முதல் முறையாக காா்த்திகை மாதத்தை ஒட்டி தேவஸ்தானம் மகா தீபோற்சவம் நடத்த உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை பெளா்ணமி அன்று ஏழுமலையான் கோயில், மடப்பள்ளி, லட்டு மடப்பள்ளி பிரகார கோயில்கள், மாடவீதி கோயில்களில் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம்.
வரும் 30-ஆம் தேதி பெளா்ணமி அன்று மாலை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் காா்த்திகை மாத மகாதீபோற்சவத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த மகா தீபோற்சவம் காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அதிக அளவில் பெண்கள் பங்கு கொள்வா் என்பதால், கொவைட் 19 விதிமுறைகளுக்கு உள்பட்டு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக இந்த மகா தீபோற்சவம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நவ. 29-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

